கிளிநொச்சியில் நண்பனின் இழப்பை தாங்காது சிறுவன் தற்கொலை ?

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான்.

கடந்த வெள்ளிக்கிழமை 12-01-2016 அன்று காலை 9.30 தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில ் தொங்கியே இறந்துள்ளதாக உறவினா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த (16 வயதுடைய)  க.பொ.சாதாரன தரம் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த மாணவனின், மரணம் தொடா்பில் அயல்வர்களும் உறவினா்களும் கருத்த தெரிவிக்கையில்,

அன்மையில் இந்தச் சிறுவனின் நண்பன் ஒருவன் அதே கிராமத்தில் தற்கொலை செய்து கொண்டமையினையடுத்து விரக்தி அடைந்த நிலையில் தனிமையில் இருந்து யோசித்து வந்ததாகவும், மரணமடைந்த நண்பன் தொடா்பில் பெரும் கவலையுற்றிருந்தாகவும் தெரிவித்தனா்.

குறித்த சிறுவனின் தற்கொலை தொடா்பில் மரண விசாரணையை மரண விசாரணை அதிகாரி யுடிஏ பிரியந்தவும், திடீர் மரண விசாரணையை மருத்துவா் க.திருலோகமூர்த்தியும் மேற்கொண்டனா்.

You might also like