வவுனியா செட்டிக்குளத்தில் ஆசிரியர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் ; ஆசிரியர் வைத்தியசாலையில்

வவுனியா செட்டிக்குளத்தில் நேற்று (18.07.2017) மதியம் 1.45மணியளவில் மோட்டார் சைக்கிலில் பயணித்த ஆசிரியரை வழிமறித்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலையில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு  பாடம் கற்பிக்கும் ரஞ்சித் கண்ணா (வயது- 29) ஆசிரியர் ( யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்) 1.30மணியளவில் பாடசாலை முடிவடைந்த பின்னர் செட்டிக்குளம் ஆசிரியர் விடுதியினை அன்மித்த சமயத்தில் 1.45மணியளவில் 25தொடக்கம் 30வயதுடைய நான்கு இளைஞர்கள் குறித்த ஆசிரியரை வழிமறித்து இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது அவர் பணித்த மோட்டார் சைக்கில் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த ஆசிரியர் உடனே தனது சக ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரிடம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என எமது ஊடகப்பிரிவு வினாவிய போது ,

இதற்கு முன்னர் ஒருவர் எனக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் மீதே எனக்கு சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரின் முறைப்பாட்டிலும் இவ்விடத்தையே முறையிட்டேன் என தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like