வவுனியா கனகராயன்குளத்தில் சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய அறுவர் கைது

வவுனியா கனகராயன் குளத்தில் நேற்று (17.07)  மாலை 4.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன்  அண்ணா தம்பி உட்பட அறுவரை கைது செய்துள்ளதாக கனகராயன்குள பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாருதி மோட்டார் வாகனத்தில் சுற்றுலாவிற்கு சென்ற இளைஞர்கள் யாழ்பாணத்திலிருந்து நேற்றைய தினம் அவர்களுடைய சொந்த இடமான கண்டிக்கு சென்று கொண்டிருக்கும் போது கனகராயன்குளத்தில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிசார் சந்தேகத்தில் மறித்து சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட 2 கிலோ 200கிராம் கஞ்சா,  மாருதி மோட்டார் வாகனம் அண்ணன் தம்பி உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

இரங்க ரஞ்சன், பண்டார விதுரங்க, அஜித் குமார, சிந்தக்க பிரடீப், மகேஷ் பண்டார, கசுண் பண்டார. இவர்களினுடைய வயது 19,20,21 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கனகராயன் குளம் பொலிசார் தெரிவித்தனர்.

You might also like