​வவுனியா புதூர் பாலமோட்டையிலிருந்து தவசியகுளம் செல்லும் பிரதான வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி

​​அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில் வவுனியா புதூர் பாலமோட்டையிலிருந்து தவசியகுளம் செல்லும் பிரதான வீதி  புனரமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட குறித்த வீதியானது 500 மீற்றர் வரை 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் மயுரன் , அமைச்சின் செயலாளர்கள், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மற்றும் இன்றையதினம் வவுனியா சமணங்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலமானது வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வீதி அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பா.டெனீஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான மயுரன் , ஜீ.ரி.லிங்கநாதன், அமைச்சின் செயலாளர்கள், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.​
You might also like