ஊழல் செய்தமை உண்மை என உறுதிப்படுத்துங்கள் சிறைக்கு செல்ல நான் தயார் : அமைச்சர் டெனிஸ்வரன்

டெலோ கட்சியில் இருந்து விந்தன் கனகரட்ணம் அவர்களை போக்குவரத்து அமைச்சு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரனிடம் ஊடகவியலாளர் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 13ம்  திகதி டெலோ அமைப்பின் செயலாளரினால் விளக்கம் கோரி அதாவது முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பம் இட்டமைக்கு விளக்கம் கோரி கடிதம் ஒன்று அனுப்பபட்டது.

அதே நேரம் கட்சியின் செயலாளரினால் முதலமைச்சருக்கும் வேறு விதமாக கடிதம் அனுப்பபட்டிருந்தது. அதாவது இந்த அமைச்சரவையில் இவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை போடா வேண்டும் என்று அதே நேரம் கடந்த காலத்தில் இரண்டு நீதியரசரும், ஒரு அரச அதிபரும் சேர்ந்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் தீர்ப்பில் இருந்த சில நடவடிக்கைகளை, சில ஏற்பாடுகளை  முதலமைச்சர் அவர்கள் சரியாக பின்பற்றவில்லை என்று தான் அதில் அதிர்ப்தி அடைந்த நாங்கள் அந்த விடயத்திற்கு இறங்கினோம். அதன் பின்னர் முதலமைச்சர் அவர்களும் கட்சியின் தலைமை குறிப்பாக  சம்பந்தன் ஐயா கேட்டுகொண்டதிற்கிணங்க ஒரு மாத கட்டாய விடுமுறையை நீக்கியிருக்கின்றார். அதன் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணையும் கைவாங்கப்பட்டிருக்கின்றது.

எனவே கடந்த காலங்களில் இரண்டு தரப்பினருக்கும் நடந்த விடயம்  சரி, பிழை என்பதற்கு அப்பால்  சில விடயங்கள் முடிந்திருக்கின்றது. ஆனால் அந்த நேரத்தில் கட்சி ஒரு பிழை விட்டிருக்கின்றது என்னை பொறுத்த மட்டில் ஊழல் செய்யவில்லை என்று அந்த நீதியரசர் குழாம் கொடுத்த தீர்ப்பிற்கு பின்னர் கட்சியில் இருந்து அதாவது  நான்கு அமைச்சர்களையும் மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் டெலோ அமைப்பினர் முதலமைச்சருக்கு கொடுத்திருந்தார்கள்.

ஆகவே அந்த விடயத்தில் என்னை பொறுத்த மட்டில் கட்சியானது தன்னுடைய கட்சியில் இருக்கின்ற ஒரு அமைச்சருக்கு அமைச்சர் ஊழல் செய்யவில்லை என்று சொன்னால் நிச்சயமாக அவர்கள் பாதுகாத்திருக்க வேண்டும்.  அது தொடர்பாக முதலமைச்சருக்கு தெரிய படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்திலிருந்து இந்த அமைச்சு பொறுப்பை பறிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்ததை நான் தெளிவாக கூறுகின்றேன். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றது.

ஆகவே அவர்கள் தற்பொழுது கூறியிருக்கின்ற காரணம், முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டது. அந்த கடிதத்திற்கு முதலமைச்சர் அவர்கள் அதில் கூறியிருக்கின்றார்.  குறிப்பாக தன்னுடைய விசாரணை குழுவிற்கு நான் தோற்ற மாட்டேன் என்று.  ஆனால் அது அல்ல உண்மை. என்னை பொறுத்தமட்டில் சட்ட ரீதியான , சுயாதீனமான தெரிவுக்குழு  முதலமைச்சர் அவர்கள் நியமிக்க வேண்டும் . ஏன் அவர் நியமிக்க பின் நிற்கிறார் என தெரியவில்லை.

கடந்த காலத்தில் இருந்த நியமிக்கப்பட்ட குழுவில் இருக்கின்ற சட்ட வலு அதே வேளை இருக்கின்ற பிரச்சனைகளை கடந்த காலங்களில் மாகாண சபையில் இருக்கின்ற உறுப்பினர்களே கேள்விக்குட்படுத்தியிருந்தார்கள். அமைச்சர் அவர்களும் கேள்விக்குட்படுத்தியிருந்தார். ஆனால் சட்ட ரீதியான குழு வருகின்ற போது எல்லோருக்கும் அது பிரயோசனமாக இருக்கும். எந்த ஒரு நபரும் முதலமைச்சர் அவர்களும் ஏனைய அமைச்சர்களும் அமைச்சர் வாரியத்தில் இருக்கின்ற கூட்டுப்பொறுப்புள்ள அமைச்சர்கள். ஆகவே கூட்டுப்பொறுப்புள்ள அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் அவர்கள் தானே அந்த விசாரணை வாரியத்தை வைப்பதென்பது பொருத்தமற்றதொன்றாக இருக்கும் ஏனென்றால் சில நேரங்களில் முதலமைச்சருக்கு எதிராகவும் பல்வேறு நிர்வாக ரீதியான  பிரச்சினைகள்,  வினைத்திறனற்ற பிரச்சனைகள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர்களாலே முன்வைக்கப்பட்டன.

முறைப்பாடுகள் என்பது எதிர் காலத்திலும் பலருக்கு எதிராக வர இருக்கின்றது. ஆனால் இது ஒரு சட்ட ரீதியாக இருக்கும் என்று சொல்லி சொன்னால் இத்தனை வருடங்களுக்கு பின்னர்  கிடைத்த மாகாண சபை அதுவும் இந்த மாகாண சபை தேவையில்லை இருந்தாலும் ஒரு  ஆட்சி அலகு அபிவிருத்திகளை பார்ப்பதற்கு தேவை என்பதை உடனடியாக ஏற்று கொண்ட நாங்கள் இத்தனை உயிரிழப்புகளுக்கு பின்னர் வந்திருக்கின்றோம். இதிலிருந்து ஒரு நபர் ஊழல் செய்வதற்கு விட முடியாது.

ஏற்கனவே நான் செய்யவில்லை என ஆணித்தரமாக  கூறியிருக்கின்றேன். அவ்வாறு நான் செய்தேன் என உறுதிபடுத்தினால் இரண்டு மடங்காக தருவதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். இரண்டு மடங்கல்ல நீதி மன்றம் சென்று தண்டனை அனுபவிப்பதற்கும் தயாராக இருக்கின்றேன். ஆகவே இது சரியாக நடைபெற வேண்டும். இந்த கட்சி ரீதியான நடவடிக்கை என்பது அது அவர்களுடைய விடயம். எவரும் பிறக்கும் போது அமைச்சராக பிறப்பதில்லை. இடையில் கிடைத்த பதவி 5 வருடங்களின் பின்னர் முடிவடைய போகிறது.  ஆனால் இதற்குள் இருந்து கொண்டு கட்சி ரீதியாக எடுக்கின்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சில கட்சிகளின் அடித்தளத்தையே ஆட்டங்காணக்கூடியளவிற்கு மாறப்போகின்றது.

அதற்கப்பால் இன்று பலர் ஆதங்கப்படுகின்றார்கள். புனர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகளும் சரி மாவீரர்கள் குடும்பங்கள், பொது அமைப்புக்கள் போன்ற பலரும் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். இது இவ்வாறு நடக்கின்றது இந்த காலகட்டத்தில் இன ஒற்றுமையை தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற ஒற்றுமையை பிளவு படுத்துவதற்காகவும்,  கட்சி ரீதியாக எல்லோரும் பிளவுபடுவோம் என்ற நிலைப்பாடே தற்பொழுது தோன்றுகின்றது. இதை அடியோடு இல்லாமல் ஆக்க வேண்டும் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று.

ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் நான் செய்த விடயம் என்னவென்று சொல்லி சொன்னால் என்ன பிழை என்று எனக்கு தெரியவில்லை. இந்த மக்களும் மாகாணத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. சமய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும், இன் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் . அபிவிருத்தியை கொடுக்க வேண்டும் அதே நேரம் எங்களுடைய அடுத்த சந்ததி சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்கான நடவடிக்கையில் தான் இறங்கியிருந்தேன்.

அபிவிருத்தி என்பது ஒரு புறம் இருக்க எங்களுடைய அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டும் என்ற இரண்டு நடவடிக்கையையும் வைத்து என்னுடைய நகர்வு இருந்திருக்கின்றது. கடந்த காலங்களிலும் இருந்தது என்பது மக்கும் அறிவீர். ஊடகங்களும் அறியும்.

அமைச்சு பொறுப்பை தரவேண்டும் என்று அடம் பிடிக்கிறவன் நானில்லை. ஆகவே தலைமைத்துவம் சரியாக என்ன பிழை இருக்கின்றது . அவ்வாறு பிழை இருப்பின் நிச்சயமாக வெளியேற்ற ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளை பிழை இல்லாத ஒரு நபரை நீங்கள் திட்டமிட்டு சதி செய்து வெளியே அனுப்புவது என்று சொன்னால் அதற்குரிய பலாபலன்களையும், தண்டனைகளையும் கடவுள் பார்த்துகொள்வார். என மேலும் கூறினார்.

You might also like