புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி

மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் இன்று மதியம் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கல்லோயாவிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like