வ/தாருல் உலூம் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி உபகரணம் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ Drrபத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான வருடாந்த நிதியொதுக்கீட்டில் செட்டிகுளம், மாங்குளம் பிரிவிற்குட்பட்ட வ/தாருல் உலூம் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி உபகரணத்தொகுதியொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 17.07.2017 அதிபர் A.C. ஜுனைதீன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர்  Dr.ப. சத்தியலிங்கம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், அமைச்சரின் பிரதேச ஒருங்கினைப்பாளர் திரு.ஹக்கீம் முனவ்பர், அமைச்சரின் உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like