கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்தவருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 1300 மில்லிகிராம் கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபரை நேற்றைய தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like