கிளிநொச்சி பாடசாலையின் அவலநிலை பருவ மழைக்கு முன் தீர்க்கப்படுமா?

இன்னும் சில மாதங்களில், நிலவும் பருவ மழைக்கு முன் நிம்மதியாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி தாருங்கள் என கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பாடசாலையில் போதிய வகுப்பறை கட்டடம் இன்மையால் தற்காலிக கொட்டகை ஒன்றில் தரம் ஒன்பது முதல் பதினொன்று வரையான மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பாடசாலையின் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த கொட்டகை பெருமளவு சேதமுற்று காணப்படுகிறது. மேலும், கூரை பெரிதும் சேதமுற்ற நிலையில் காணப்படுவதால் தற்போது நிலவுகின்ற கடும் வெயிலுக்கு சமாளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்தோடு, மாணவர்கள் சூரியனின் நகர்வுக்கு ஏற்ப இருக்கைகளை நகர்த்தி, நகர்த்தி இருந்தே கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவர்களால் சீராக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், குறித்த கொட்டகையில் கல்வி கற்கும் மாணவா்கள் கருத்து தெரிவிக்கையில்,

தங்களுக்கு நிரந்தர வகுப்பறை கட்டடம் ஒன்றை அமைத்து தருமாறும், அதற்கு முன்னதாக பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன் இந்த கொட்டகையின் கூரையினை வேய்ந்து தங்களின் அவலத்தை தீர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.

You might also like