வீரபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அமைச்சர் சத்தியலிங்கத்தால் தளபாடங்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான வருடாந்த நிதியொதுக்கீட்டில் செட்டிகுளம் பிரிவிற்குட்பட்ட வீரபுரம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு தளபாடங்கள்(பிளாஸ்ரிக் கதிரைகள்) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 17.07.2017 அன்று  வீரபுரம், மீள் எழுச்சி கட்டிட மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து மக்கள் குறைகேள் சந்திப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr.ப. சத்தியலிங்கம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அமைச்சரின் பிரதேச ஒருங்கினைப்பாளர்கள்,  அமைச்சரின் உத்தியோகத்தர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் செட்டிகுள கிளையினர்,  பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீட்டுத்திட்டம், தற்போதைய குடிநீர் பிரச்சினை, காணி பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. அமைச்சரின் உடனடி நடவடிக்கை மூலம் பல விடயங்களுக்கு இதன்போது உடனடி தீர்வுகளும் எட்டப்பட்டன.

You might also like