டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஆறு மாதங்களில் டெங்கு நோய் காரணமாக 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் டெங்கு நோய் பரவியுள்ளமை தொடர்பில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இதுவரை எந்த பயணத்தடை எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு உதவ உலக சுகாதார அமைப்பு நுளம்பு குடம்பிகள் மற்றும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தல் சம்பந்தமான இரண்டு நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

டெங்கு நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 0.3 வீதமாக குறைந்திருந்தாலும் டெங்கு நோய் ஏற்பட்ட பின்னரான சுகாதார செயற்பாடுகளில் இலங்கை பின்நோக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயுள் கால எதிர்பார்ப்பில் ஓரளவு குறைவு ஏற்படலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் வரலாற்றில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இந்த வருடத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You might also like