வவுனியாவில் திரையரங்குக்குள் குழப்பம்: பொலிசார் அதிரடி

வவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்குள் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திரையரங்குக்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் உள்ள திரையரங்கில் மாலை 5மணிக்கு போடப்பட்ட பைரவா திரைப்பட காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் திரைப்பட காட்சிகளைப் பார்த்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார் திரையரங்குக்கு சென்று அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திரைப்படக் காட்சி தொடர்ந்து இடம்பெற்றது.
You might also like