கிளிநொச்சியில் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது!

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வைத்து முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டிற்கு சென்றவர்கள் தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்தியுள்ளதுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தவவேந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி பிரஜைகள் குழுவுக்கும் முறைப்பாடு உறவினர்களால் செய்யப்பட்டுள்ளது.

You might also like