உணவினால் ஏற்பட்ட விபரீதம்! மாமியார் பலி – இருவர் படுகாயம்

மாத்தறையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவிற்காக குழம்பு கேட்ட சமயத்தில் வாக்குவாதம் முற்றியமையால், நபரொருவர் மேற்கொண்ட கத்திக்குத்து காரணமாக அவரது மாமியார் உயிரிழந்துள்ளதுடன், மனைவி மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரவுணவின் போது கணவன் மனைவியிடம் உணவிற்காக குழம்பு கேட்ட போது மனைவி கொடுப்பதற்கு மறுத்துள்ளார்.

இந்த நிலையில் கோபத்திற்கு உள்ளான கணவன் மனைவியை தாக்கிய நிலையில் அதனை தடுக்க முயன்ற மகளையும் தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரது மாமியார் தனது மகள் மற்றும் பேத்தியைக் காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீது சரமாரியாக கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளார். இதில் 58 வயதான பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட நபரை மாத்தளை, மஹாவெல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like