கிளிநொச்சியில் வறட்சியால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவரும் வறட்சிக் காலநிலையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச்செயலக மண்டபத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கரைச்சி – பூனகரி பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், விவசாய திணைக்களம் போன்றவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை, மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்தின் வறட்சி நிலை தொடர்பில் ஆலோசனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like