கிளிநொச்சி ஏ9 வீதியில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், முச்சக்கர வண்டியின் சாரதியுமே படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like