வாகனங்கள் மீது கல்வீச்சு: கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து  கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது  நேற்று இரவு  மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து  மீது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகளிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து மீதான தாக்குதலை தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கும் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கும் உட்பட்ட ஏ9 வீதியில் பயணித்த வாகனங்களுக்கும் இனந்தெரியத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாக கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸில் நிலையங்களில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

You might also like