வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற இன்னுயிர் ஈர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு

வவுனியா கனகராயன்குளத்தில்  ஈழப்புரட்சி அமைப்பின் ( ஈரோஸ்) ஏற்ப்பாட்டில்  இன்று 22.07.2017 மாலை 4.00மணியளவில் விடுதலை போராட்டத்தில் இன்னுயிர்களை அர்பணித்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூறும் நிகழ்வும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது

யுத்தத்தில் உயிர்நீத்த போராளிகள் , பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பொதுச்சுடரும் ஏற்றி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான  தியாகராஜா, மயுரன், சிறிரேலோ அமைப்பின் செயலாளர் உதயராசா ,ஈரோஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராசா , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஈரோஸ் அமைப்பினரின் வளாகத்தில் 480மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like