நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக, நம்பிக்கைக்குரியவராகவுமிருந்த மெய்பாதுகாவலர் உயிரிழப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

இந்த தாக்குதலின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த மெய்ப்பாதுகாவலர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் இருந்துள்ளதுடன், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சந்தேக நபர் தீவகப் பகுதியில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like