வவுனியாவில் வாள்வெட்டு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்.. இருவர் படுகாயம்

வவுனியா வைத்தியசாலை அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like