காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே? வவுனியாவில் கதறும் உறவுகள்

வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகே கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்  சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.

இவ் போராட்டம் இன்றுடன் ( 23.07.2017) 150நாளை எட்டியுள்ள நிலையில் தமக்கு நீதி கோரி வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலிருந்து கவனயீர்ப்பு  பேரணியேன்றினை ஏற்பாடு செய்திருந்தினர்.

காலை 11.30மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கந்தசாமி கோவில் முற்றலில் இருந்து நடைபவனியாக மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து அவர்களின் போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.
நடைபவனியின் போது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாயொருவர் வீதியில் உருண்டு கதறி அழுவதை காணக்கூடியதாக இருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
You might also like