கற்பகபுரம், விவேகானந்தா சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்  Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான வருடாந்த நிதியொதுக்கீட்டில் வவுனியா, கற்பகபுரம், விவேகானந்தா சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள்(பிளாஸ்ரிக் கதிரைகள்) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைக் கையளிக்கும் நிகழ்வு கற்பகபுரம், செந்தமிழ் முன்பள்ளி மண்டபத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு.பாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. தொடர்ந்து மக்கள் குறைகேள் சந்திப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr.ப. சத்தியலிங்கம் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன்  அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் சனசமூக நிர்வாகத்தினர்,  அமைச்சரின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீட்டுத்திட்டம்,  காணி பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. அமைச்சரின் உடனடி நடவடிக்கை மூலம் பல விடயங்களுக்கு இதன்போது உடனடி தீர்வுகளும் எட்டப்பட்டன. சில விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த காலங்களில் வீட்டுத்திட்டம் மற்றும் காணி விடயங்களில் உடனடித் தீர்வுகளை பெற்றுத்தந்தமைக்காக அமைச்சர் அவர்கள் சனசமூக நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

You might also like