கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வைப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் கல்வி கனைக்சன் (கனடா) நிதிப்பங்களிப்புடன் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையூடாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் உதவிக்கமைவாக இன்றும் ஒருதொகுதி மாணவர்களுக்கு இந் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவர் அதிபர் அ.பங்கயற்செல்வன்,ஆசிரியரும் சமூக சேவையாளருமான இ.மதுரமணி,கல்விவளர்ச்சி அறக்கட்டளை உத்தியோகத்தர்களும் மற்றும் உதவி பெறும் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இவ் உதவித்திட்டத்தின் நோக்கம்தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் இந் நிதித்தொகை அவர்கள் பட்டப்படிப்பை முடித்துவெளியேறும் வரை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like