கிளிநொச்சியில் தொடர் வரட்சி காரணமாக குறைவடையும் குளங்களின் நீ​ர் மட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் வரட்சி காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஒன்பது குளங்களின் நீர்மட்டமும், என்றுமில்லாதவாறு குறைவடைந்துள்ளதாக, பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

“இதற்கமைய,  இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 2 அடி 3 அங்குலமாகவும், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் 10 அடி அங்குலமாகவும், கல்மடுக்குளத்தின் நீர் மட்டம் 5 அடி 6 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம் 2 அங்குலமாகவும், குடமுறுட்டிக்குளத்தின் நீர்மட்டம் 4 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளத்தின் நீர் மட்டம் 3 அடி 3அங்குலமாகவும், வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 3 அடி 2 அங்குலமாகவும், புதுமுறிப்புக்குளத்தின் நீர்மட்டம் 10 அடி 5 அங்குலமாகவும், கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 4 அடியாகவும் காணப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.

You might also like