கிளிநொச்சி – ஆனையிறவு மினி வான் சேவை எப்போது ஆரம்பிக்கப்படும்?

கிளிநொச்சி – பரந்தனுக்கும் முல்லைத்தீவு – திருமுறிகண்டிக்கும் இடையில் நடைபெறுகின்ற மினி வான் சேவைகளை, கிளிநொச்சி ஆனையிறவு வரை நடாத்துமாறு, உமையாள்புரம், ஆனையிறவுப் பகுதிகளில் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஏ-9 வீதியில் பயணிக்கின்ற பஸ்கள், தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு ஏற்றுவதில்லை எனவும், இதன் காரணமாக பரந்தன் இந்து மகா வித்தியாலயம், கிளிநொச்சி நகரப் பாடசாலைகளுக்குச் செல்கின்ற மாணவர்கள், சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த மினி வான் சேவையை ஆனையிறவு வரை நடாத்துமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like