நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம்

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கமொன்றை அறிமுகம் செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இவ்வாறான ஒர் இலக்கத்தை அறிமுகம் செய்வதன் மூலம், வரி இலக்கம் உடைய அனைவரும் வரி செலுத்த வேண்டும்.

எனினும் நாடு என்ற ரீதியில் முன்னோக்கி நகரும் போது வரி செலுத்த வேண்டிய அனைவரும் வரிச் செலுத்த வேண்டும். வரியின் அடிப்படையை உயர்த்துவதற்கு இவ்வாறு வரியிலக்கம் ஒன்றை அறிமுகம் செய்வது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like