லண்டனின் ஜூலை கலவர நினைவு தினம் அனுஷ்டிப்பு

லண்டனில் ஜூலை கலவரத்தின் 34வது ஆண்டின் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

லண்டனிலுள்ள 10 Downing street என்ற இடத்தில் மிக எழுச்சிகரமாக நடைபெற்றது.

நிகழ்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் மற்றும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பெரும் துயரம் படிந்த நாளான நேற்றைய தினம் பல நகரங்களில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

 

You might also like