வவுனியாவில் விடுதியில் புகுந்து இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம் : முகாமையாளர் வைத்தியசாலையில்

வவுனியா முதலாம் குருக்கு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்த இனந்தெரியாதநபர்கள் இன்று (24.07.2017) மதியம் 2.45மணியளவில் விடுதி முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07.2017) மதியம் 2.45மணியளவில் நான்கு நபர் விஜயம் மேற்கொண்டு அறை வேனுமேன கோரியுள்ளனர். எனினும் முகாமையாளர் அறை இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் முகாமையாளரை தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டதையடுத்து விருந்தினர் விடுதியின் உரிமையாளர் விஜயம் மேற்கொண்டு தாக்குதலுக்குள்ளான விடுதி முகாமையாளரை (குமார் -வயது48) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக காயமடைந்த முகாமையாளரை தொடர்பு கொண்டு வினாவிய போது,

மதியம் நான்கு நபர்கள் மது போதையில் வந்தார்கள் . அவர்கள் என்னிடம் அறை வேனுமேன கோரினார்கள். நான் இல்லை என தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் என் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றார்கள் என தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

You might also like