விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து ஆராய கிளிநொச்சியில் விசேட கூட்டம்: சிறிதரன் தெரிவிப்பு

வறட்சியால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாளை விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மழைபெய்ய வேண்டுமென வேண்டி கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பூஜையை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு மீளக் குடியேறியபோது, நாட்டின் சூழலை கருத்திற்கொள்ளாமல் இரணைமடு குளத்திலிருந்து தண்ணீரை கொண்டுசெல்ல முயற்சித்தனர் என்பதை சுட்டிக்காட்டிய சிறிதரன், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி உள்ளிட்ட இயற்கையின் சூழ்நிலையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

You might also like