வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது மதுபோதையில் தனியார் பேரூந்து நடத்துனர் முயற்சி

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (24.07.2017) மாலை  5.00மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது மதுபோதையில் தனியார் பேரூந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து இன்று தனியார் போக்குவரத்து சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தனியார் பேரூந்தின் நடத்துனர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச பேரூந்தில் ஏறியுள்ளார்.  பேரூந்தில் ஏறிய குறித்த நபர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மதுபாணம் அருந்தியுள்ளார். இதனையடுத்து இ.போ.ச பேரூந்தின் நடத்துனர் சென்று இவ்விடத்தில் மதுபானம் அருந்த வேண்டாமேன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தனியார் பேரூந்து நடத்துனர் தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டதுடன் இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளவும் முயற்சித்துள்ளார். எனினும் அருகிலிருந்த பொதுமக்கள், பிரயாணிகள் தடுத்துள்ளனர்.

You might also like