முல்லைத்தீவில் இளைஞர் மீது கத்தி வெட்டு தாக்குதல்: நபரொருவர் கைது

முல்லைத்தீவு – முகத்துவாரம், கொக்கிளாய் பகுதியில் தொழில் ரீதியாக ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொக்கிளாய் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞரொருவர் மீது மற்றொரு நபர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் கடற்கரை பகுதியினூடாக தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், 25 வயதான இளைஞரே தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like