இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் 48 மணித்தியாலம் தடுப்பு காவலில்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த நபரின் நண்பர்கள் இருவரையும் 48 மணித்தியாலம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள யாழ்.நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி மாலை 5.10 மணியளவில் நல்லூர் தெற்கு கோபுரவாசல் பகுதியில் நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்தபோது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.

மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.

பின்னர், துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டமுன்னாள் போராளியான அஜந்தனுடன் மது அருந்திய அவரின் நண்பர்களான செல்வராசா மகிந்தன் மற்றும் பாலசிங்கம் மகேந்திர ராசா ஆகிய இருவரும் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்.நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போது 48 மணிநேர தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

You might also like