செட்டிக்குளத்தில் திடிர் தீ விபத்து : வீடு முற்றாக எரிந்து நாசம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீடு ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக  செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், அழகாபுரி கிராமத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், அழகாபுரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து குடும்பத்தினர் தமது பிள்ளையான சிறுவன் ஒருவனை வீட்டில் நிறுத்திவிட்டு வெளியில் சென்ற சமயமே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவியதையடுத்து சிறுவன் கூச்சலிட்டதுடன் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தீயை அணைக்க முயன்றதுடன் பொலிசாருக்கும் தகவல் வழங்கினர். பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வீடு முழுமையாக எரிந்து நாசமாகிய நிலையிலேயே தீ பரம்பல் கட்டுப்படுத்தப்பட்து.

வீட்டில் இருந்த சகல பொருட்களும் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இத் தீ விபத்துக்கு மின்னொழுக்கே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like