கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கூமாங்குளம் முதியோர் சங்கம் வவுனியாவில் மிகச்சிறப்பாக இயங்கிவரும் முதியோர் சங்கங்களில் ஒன்றாகும் .

அந்தவகையில் வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் வவுனியா பிரதேச செயலகத்தினூடாக இவ்வருட மூலதன நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா பத்து இலட்சத்தினை முதியோர் சங்கக்கட்டிடத்திற்கு ஒதுக்கி உதவியுள்ளார் .

வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கட்டிடம் அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள இவ்வேளை இன்று கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சங்கத்தின் தலைவர் திரு முனுசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அடிக்கல் நாட்டும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் . சங்கத்தின் செயலாளர் திரு நாகையா பொருளாளர் திரு.ஸ்ரீதரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு.எஸ்.கே.வசந்தன், செல்வி கமலாம்பிகை மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து இந்நிகழ்வைச் சிறப்பித்தனர் .

You might also like