வெளிநாட்டில் இலங்கை இளைஞனின் மோசமான செயற்பாடு! சிறுமியால் கொழும்பில் சிக்கினார்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவரை மேலதிக நீதவான் அசங்கா ஹெட்டிவல பிணையில் விடுதலை செய்துள்ளார்.

15 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 1 மில்லியன் ரூபா தனிப்பட்ட பிணையிலும் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பூர்வீகத்தை கொண்ட 15 வயதுடைய அவுஸ்திரேலிய சிறுமியை, அந்நாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் கடவுச்சீட்டு விசாரணைக்காக நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அயேஷ கௌஷல்ய டி சில்வா என்ற 24 வயதுடைய குறித்த இளைஞர் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கற்று வந்த நிலையில், 15 வயதான பாதிக்கப்பட்ட சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தேக நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும், அதன்போது தான் 15 வயதில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டவுடன் சந்தேகநபர் உடனடியாக இலங்கைக்கு பயணித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிலும் அவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சிறுமி மற்றும் சந்தேகநபரான இளைஞனின் குடும்பங்கள் நெருக்கமான உறவினை பேணி வந்துள்ளதாகவும், 20 மில்லியன் ரூபா பண உதவி கோரிய போது, அதனை வழங்க முடியாமல் போயுள்ளது.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த சிறுமியால் தனது காதலனுக்கு எதிராக தவறான முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 25ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

You might also like