ரயிலில் மோதி வவுனியா தனியார் பேரூந்து நடத்துனர் உடல் சிதறி பலி

மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று (24.07.2017) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்தில் மோதுண்டு வவுனியாவைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மாங்குளம் பகுதியிலுள்ள குஞ்சுக்குளத்தில் தனது உறவினரின் வீட்டிற்குச் சென்ற வவுனியா அங்கர் தனியார் பேருந்து சாரதியான மரியசெல்வன் மயூரன் 32வயதுடைய வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள உறவினரின் வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் புகையிரதப்பாதையில் காற்றோட்டத்திற்காக இருந்துள்ளார். இரவு 9.15மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த புகையிரதத்தில் மோதி சம்பவ இடத்திலே உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகவும் எனினும் புகையிரத சாரதி புகையிரத்தினை நிறுத்தாது சென்றுள்ளதாகவும் பின்னர் கனகராஜன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சிதறிய உடல் பாகங்களை மீட்டு சடலத்தினை எடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று தனியார் பேருந்து சாரதிகள் வடமாகாணத்தில் பணிப்பறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர் இதன்போதே குறித்த சாரதி உறவினரின் வீட்டிற்கு நேற்று மாலை சென்றுள்ளார். இதன்போதே புகையிரதம் மோதி உயிரிழந்தள்ளார்.

பொலிசார் குறித்த சம்பவம் தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like