சுடச்சொன்னார் சுட்டேன்! சந்தேகநபர் வாக்குமூலம்

“நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன்.

அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார்.

நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது”. இவ்வாறு யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

You might also like