வவுனியா மாவட்ட செயலகத்தில் அத்துமீறி தேசிய கொடியை கழற்றி எறிந்த நபர் கைது

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (25.07.2017) மதியம் 2.00மணியளவில் இனந்தெரியாத நபரோருவர் மாவட்ட செயலகத்தில் பறக்க விடப்பட்டிருந்த இலங்கையின் தேசிய கொடியினை கழற்றி கிழே வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா மாவட்ட செயலகத்தின் சி.சி.ரி.வி காணோளியினை வைத்து குறித்த நபரின் வாகனத்தினையும் குறித்த நபரையும் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனநல பாதிக்கப்பட்டவர் எவ்வாறு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பார்? மற்றும் எவ்வாறு வாகனம் செலுத்துவார்? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன

வவுனியாவில் அனைத்து மக்களும் இன,மத,பேதங்களை மறந்து வாழும் சமயத்தில் இவ்வாறான செயற்பாடு கண்டிக்கத்தக்கது.

 

 

You might also like