வவுனியா ஈரட்டைபுளியங்குளம் மயானத்திற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள ஈரட்டைபுளியங்குளம் மயானத்திற்கு அடையாளம் தெரியாத சிலரால் இன்று (25.07.2017) மதியம் தீ வைக்கப்பட்டுள்ளது.

மயானம் முழுவதும் தீ பரவியதை அவதானித்த ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மயானத்தை நோக்கி விரைந்த நகரசபை தீயணைப்புப் பிரிவினர் தீயினை அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மற்றும் ஈரட்டை பெரியகுளம் பொலிஸ் நிலையம் உட்பட ஏ9 வீதிக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like