சுவிஸ் குமாருக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி! குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு

சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த சுவிஸ் குமார் என்பருக்கும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கும் நேரடி தொடர்பு இருக்கும், என்பது குறித்து மன்றுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கு இடையில் இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுத்துள்ளதாகவும், அது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவியதாக தெரிவித்து யாழ். மாவட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகநபரான வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மன்றில் முன்னிலைப்படுத்துப்பட்டதுடன், அவர் சார்பில் சட்டத்தரணிகள் மூவர் மன்றில் முன்னிலையாகிருந்தனர்.

சுவிஸ்குமாரின் கடவுச்சீட்டை முடக்குமாறு உத்தரவிட்டவர், சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவி இருக்கலாம் என முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும், சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், பிணை கோரிக்கையினை நிராகரித்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, இலங்கையில் யுத்தம் நடைபெற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில் சுவிஸ் குமார் என்பவர் சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்துள்ளார்.

சுவிஸ் குமாருக்கு சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருடன் நேரடி தொடர்பு இருக்கும் என்பது தொடர்பில் நீதிமன்றுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இருவருக்கும் இடையில் இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆகையினால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like