படையினர் வசமுள்ள கால்நடைகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 618 ஏக்கர் மக்கள் காணிகளில் உள்ள கால்நடைகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் 618 ஏக்கர் வரையான நிலப்பரப்பு இன்று வரைக்கும் கடற்படையினர் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

இதில் 390 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவையாகவும், ஏனையவை அரச காணிகளாகவும் காணப்படுகின்றன.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

இவ்வாறு கடற்படையினர் கட்டுப்பாட்டிலுள்ள 618 ஏக்கர் காணிகளிலும், யுத்தத்தில் காணிகளை கைவிட்டுச் சென்றவர்களுக்கு சொந்தமான கால்நடைகள் காணப்படுகின்றன.

இவற்றை விடுவித்து தருமாறு நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இதேவேளை, இன்றுள்ள வறட்சி மற்றும் வாழ்வாதார நெருக்கடி என்பவற்றின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அதிலும் குறிப்பாக இப்பகுதிகளில் உள்ள கால்நடைகள் பல்வேறு விதங்களில் கடத்தப்படுகின்றன.

எனவே படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கால்நடைகளை விடுவித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like