முல்லைத்தீவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 474.5 மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

முல்லைத்தீவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 999 மில்லியன் ரூபா நிதியில், 474.5 மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டங்கள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக இவ்வாண்டு 999 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 474.5 மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டங்கள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதாவது புதிய வீடுகள் அமைத்தல், சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல், வாழ்வாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம், மின்சார இணைப்பு, விவசாய குளங்கள் புனரமைத்தல், உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like