வெளிநாடொன்றில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையருக்கு கௌரவம்

தென் கொரியாவில் தொழிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் தனது உயிரை பணயம் வைத்து வயோதிப பெண் ஒருவரை காப்பாற்றிய இலங்கையர் நாடு திரும்பியுள்ளார்.

ஹசலக மினிபே நிமலசிறி பண்டார என்பவரே  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி பகல் 1.10 மணியளவில் தென் கொரிய நாட்டவர் உட்பட மேலும் பல வெளிநாட்டவர்கள் பார்த்து கொண்டிருக்கும் போது தீப்பற்றிய வீட்டின் பின் பக்க கதவினால் சென்று வயோதிப பெண் ஒருவரை இந்த இலங்கையர் காப்பாற்றியிருந்தார்.

இந்த சம்பவத்தினால் நிமலசிறி பாரிய தீக் காயங்களுக்குள்ளாகியிருந்தார்.

இந்த நிலையில் அவரது வீர செயற்பாட்டை கௌரவிக்கும் வகையில் தென் கொரிய அரசாங்கத்தினால் அவருக்கு விசேட விருது ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like