வ.மா சுகாதார அமைச்சரின் வேண்டுகோளிற்கமைய பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு  பசுக்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வேண்டுகோளிற்கமைய பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு புன்னகை அமைப்பு சிறுவர் வறுமை ஒழிப்பு நிதியத்தின் நிதி உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு  நல்லிண பசுக்கள் வாழ்வாதாரமாக வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் புன்னகை அமைப்பின் தலைவர் கந்தையா ஷர்மிலன் புன்னகை அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு.நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா ( பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் முல்லைத்தீவு), உபதலைவர் ச.லினோஜன் , உபசெயலாளர் ப.துசிதரன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர்களான பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் அ.சுரேந்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பயனாளிகளுக்கு மாடுவளர்ப்பு, பராமரிப்பு, எதிர்கால அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

You might also like