சற்று முன் வவுனியா சமனங்குளத்தில் வாள்வெட்டு தாக்குதல் : ஒருவர் படுகாயம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபடபட்டுள்ளார்.

இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்தது. இதன்போது குறித்த குடும்பஸ்தர் காலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார். அது தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் முறைப்பாட்டை மீளப் பெற்று சமாதானமாக செல்வது குறித்து குறித்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இவரிடம் கோரிய போதும் இவர் அதனை மறுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் வவுனியா, சமனங்குளம் பகுதியில் நின்றிருந்த போது அவ் இளைஞர்களுடன் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக மீண்டும் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் காயமடைந்த குறித்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் வவுனியா, ஆச்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது 27) என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

You might also like