வவுனியாவில் இரு மோட்டார்கள் சைக்கில் விபத்துக்குள்ளானதில் பெண்ணோருவர் வைத்தியசாலையில்

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (25.07.2017) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடிச் சந்தியில் இரு மோட்டர் சைக்கிள்கள் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.
சந்தை உள்வட்ட வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டர் சைக்கிளும், பசார் வீதியில் இருந்து வவுனியா வைத்தியசாலை நோக்கி ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற மோட்டா சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் சாரதியான பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற் கொண்டு வருகிறார்கள்.
You might also like