வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான எரிபொருள் விநியோக மையம் இராணுவக்கட்டுபாட்டில்

இன்று (26.07.2017) காலை ஜனாதிபதி இலங்கை பொற்றோலியக்கூட்டுத்தாபனம் அத்தியாவசிய தேவைக்கு உற்படுத்திய வர்த்தகமானிய அறிவித்தலையடுத்து இராணுவத்தினரிடம் இச் சேவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கு அமைவாக நாட்டிலுள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களை இன்று முதல் இராணுவம் பொறுப்பேற்று விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதையடுத்து வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான பிரதான எரிபொருள் விநியோக நிலையத்தினை இன்று (26.07.2017) 26 காலை 8.00மணியளவில் காலை படையினர் பொலிசார் இணைந்து பொறுப்பேற்றுள்ளனர்.

இதையடுத்து தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இனி வழமையாக எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று முதல் எரிபொருள் விநியோக நிலையங்களிலுள்ள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று படையினர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like