கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனையை தடுப்போம்: விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்கில் கியுடெக் கரிடாஸ் நிறுவனத்தினரால் விழிப்புணர்வு பேரணி ஒன்று கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியிலிருந்து ஏ9 வீதி வழியாக முன்னெடுக்கப்பட்ட குறித்த பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இது தொடர்பான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு, போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சுலோகங்கள் மூலம் விளக்கப்பட்டது.

You might also like