கிளிநொச்சி பளையில் பெறுமதி மிக்க முதிரைமர குற்றிகள் மீட்பு

கிளிநொச்சி பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள் பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

மல்லாவி பகுதியிலிருந்து எருவுக்குள் மறைத்து பார ஊர்தி ஒன்றில் கடத்த முற்பட்ட மரக் குற்றிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட குற்ற தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய பளை இத்தாவில் பகுதியில் வைத்து நேற்று சோதனையிட்ட போது இவை மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like