முல்லைத்தீவில் அதிரடிப்படையினரால் யுத்த வெடி பொருட்கள் அழிப்பு

முல்லைத்தீவு – உன்னாப்புலவு பகுதியில் யுத்த வெடி பொருட்கள் சிலவற்றை அதிரடிப்படையினர் இன்று பிற்பகல் தாக்கி அழித்துள்ளனர்.

பொது மக்களின் வாழ்விடங்களில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களே இவ்வாறு தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாகவே குறித்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வெடி பொருட்களை அழிக்கும் போது ஏற்பட்ட சத்தம் அப்பகுதி முழுவதும் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like